பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டனர் !!

  • Tamil Defense
  • April 21, 2020
  • Comments Off on பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டனர் !!

கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் சோபோரில் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்த தலைமை காவலர் பிஷ்வஜித் கோஷ் மற்றும் காவலர் ஜாவீத் அஹமது ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் சோபோரில் ஒரு சோதனை சாவடியில் பணியில் இருந்த போது பயங்கரவாதிகள் ஏகே47 துப்பாக்கியால் காயமடைந்தனர், அன்று சில மணி நேரம் முன்னர் நடைபெற்ற தாக்குதலில் ஒரு மத்திய ரிசர்வ் காவல்படையின் காவலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சோபோரில் நடைபெற்ற தாக்குதலில் 3 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. காவலர் ராஜீவ் ஷர்மா, காவலர் சந்தர் பாகாரே மற்றும் காவலர் பார்மர் சத்யபால் சிங் ஆகியோர் வீரமரணமடைந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிஹார், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வீரமரணமடைந்த வீரர்கள் மத்திய ரிசர்வ் காவல்படையின் 179ஆவது பட்டாலியனை சேர்ந்தவர்கள் ஆவர், இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இயக்கத்துடன் இணைந்து இயங்கி வரும் ஜே.கே ஃபைட்டர்ஸ் எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.