கொரோனா காரணமாக எல்லையில் பன்மடங்கு கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் கடத்தல் வீழ்ச்சி !!

  • Tamil Defense
  • April 13, 2020
  • Comments Off on கொரோனா காரணமாக எல்லையில் பன்மடங்கு கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் கடத்தல் வீழ்ச்சி !!

எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது இந்திய வங்காளதேச எல்லையில் கால்நடைகள் கடத்தல், கள்ளநோட்டு மற்றும் போதை பொருட்கள் கடத்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

தெற்கு வங்காள பகுதிக்கு பொறுப்பான எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி ஒய்.பி. குரானியா கூறும்போது தெற்கு வங்காளம் பகுதியில் பன்மடங்கு கண்காணிப்பை அதிகரித்துள்ளது இதன் காரணமாக கடத்தல் மிகவும் குறைந்துள்ளது என்றார். இந்திய வங்காளதேச எல்லை மிகவும் மோசமான எல்லைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜசாஹி செக்டாரில் தான் அதிக கள்ளநோட்டு கடத்தல் நடைபெறுகிறது, தற்போது கொரோனா காரணமாக கள்ளநோட்டு அச்சடிக்கும் குழிவினரால் முன்பு போல புழக்கத்தில் விட முடியவில்லை.

மேற்கு வங்காள மாநிலம் வங்காளதேசத்துடன் சுமார் 2,216கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. தெற்கு வங்காள பகுதியில் உள்ள 915கிமீ எல்லையில் 371கிமீ எல்லையில் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.