தற்போது கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் காரணமாக ஆயுத தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 40% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிரந்தரமாக முடப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இது பல்லாயிரம் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் மேலும் நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்கும்.
மத்திய அரசின் உதவி திட்டம் இல்லையெனில் இந்த நிறுவனங்கள் முடப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.