
கேரனில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டர் குறித்து தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.தற்போது ஆறு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக் சிறப்பு படையான எஸ்எஸ்ஜி மற்றும் லஷ்கர் பயங்கரவாத அமைப்பு இணைந்து இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர்.ஐந்து பேர் கொண்ட மூன்று குழுக்களாக இந்தியாவிற்குள் இவர்கள் நுழைந்துள்ளனர்.எப்போதும் இரு பேர் கொண்ட குழுவாக ஆறு பேர் தான் நமது எல்லைக்குள் ஊடுருவுவர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்தியா நுழைந்த பயங்கரவாதிகளை நமது வீரர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் இராணுவத்தின் சிறப்பு படை வீரர்களால் முதல் ஐந்து பேர் கொண்ட பயங்கரவாத குழு சுற்றி வளைக்கப்பட்டு கடும் தாக்குதலை நமது வீரர்கள் நடத்தியுள்ளனர்.அங்கேயே ஐந்து பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன் தான் இந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உதவிசெய்த இரு பாக் எஸ்எஸ்ஜி வீரர்களை நமது சிறப்பு படை வீரர்கள் போட்டு தள்ளினர்.தற்போது இந்தியாவிற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் கடுமையாக பயிற்சி பெற்றவர்கள்.நமது சிறப்பு படை வீரர்களுக்கு இணையான பயிற்சி பெற்றவர்கள்..அவர்களது வரலாறு குறித்தும் தகவல் கிடைத்துள்ளதள ஆனால் அவற்றை எங்களால் பகிர முடியாது.
முதல் குழுவை நமது வீரர்கள் போட்டுத்தள்ளிய உடன் ஐந்து பேர் கொண்ட இரண்டாவது பயங்கரவாத குழு நமது வீரர்களை எதிர்பாராத விதமாக தாக்க தொடங்கியுள்ளது.இதில் அங்கேயே ஒரு சிறப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.இரு வீரர்கள் படுகாயமுற்றனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக படுகாயமடைந்த வீரர்களை வானூர்தி கொண்டு மீட்க முடியாமல் போனது.
ஒரு வாரமாக நடந்து வரும் போரில் நான்கு சிறப்பு படை வீரர்கள் மற்றும் இரு ராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
மறுபுறம் இந்தியா நோக்கி ஆர்டில்லரி தாக்குதலை பாக் நடத்தியுள்ளது.இதற்கு பதிலடி கொடுத்த நமது வீரர்கள் பாக்கின் ஆர்டில்லரி இருப்பிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.இதில் பாகிஸ்தானுக்கு மூன்று மடங்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.