ஆஃப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்குவது பற்றி இந்தியா பரிசீலிக்க வேண்டுமா ??

  • Tamil Defense
  • April 21, 2020
  • Comments Off on ஆஃப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்குவது பற்றி இந்தியா பரிசீலிக்க வேண்டுமா ??

பாகிஸ்தான் கடைசியாக தலிபான்களிடம் ஆஃப்கானிஸ்தானை ஒப்படைத்து விட்டது, பன்னாட்டு படைகள் ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த காலகட்டத்தில் இருந்தே பல முக்கியமான மூத்த தலிபான் தலைவர்களை பாகிஸ்தான் பாதுகாத்து வந்தது. இனி இதற்கெல்லாம் சேர்த்து தலிபான்கள் பாகிஸ்தானுக்கு கைமாறு செய்ய வேண்டிய காலம் நெருங்கி வருகிறது.

இந்திய மற்றும் மேற்கத்திய உளவு நிறுவனங்களின் பார்வை, இந்திய படைகளின் எல்லை தாண்டிய தாக்குதல் ஆகியவை பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்களை நடத்துவதை சிக்கலாகி உள்ளது.

ஆகவே அங்கிருந்து பயங்கரவாத முகாம்களை ஆஃப்கானிஸ்தானுக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஆஃப்கன் படைகள் நடத்திய தாக்குதல்களில் பல பாக் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டதும் இதனை ஊர்ஜிதம் செய்கிறது.

ஆஃப்கனில் பன்னாட்டு படைகள் இருந்த காலங்களிலேயே ஓய்வு பெற்ற பாக் ராணுவ அதிகாரிகள் ஆஃப்கானிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

ஆஃப்கானிஸ்தானில் இந்திய உளவுத்துறை நன்கு ஆழமான வலிமையான உளவு வலைபின்னலை கொண்டுள்ளது, ஆகவே எங்கெல்லாம் பயங்கரவாத முகாம்கள் உள்ளன என்பது போன்ற தகவல்கள் இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

இந்தியா வெறுமனே காஷ்மீர் பிராந்தியத்தில் மட்டும் பயங்கரவாதிகளை ஒடுக்குவது தீர்வை தராது ஆகவே ஆஃப்கானிஸ்தானிலும் கவனத்தை செலுத்துவது நல்லது.

ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானிடம் இருந்து இந்தியா தனது படைகளை அனுப்புமாறு கோரிக்கை வைத்திருந்தாலும் நேரடியாக வீரர்களை களமிறக்குவது நல்லதல்ல ஆகவே ஆளில்லா விமானங்கள், விமானப்படை ஆகியவற்றை கொண்டு இந்தியா ஆஃப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கலாம்.

இதற்கு ஆஃப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஈரானின் விமானதளங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றால் காஷ்மீர் விவகாரத்தில் ஈரானுடைய இரட்டை நிலைப்பாடு யோசிக்க வேண்டியதாகிறது.

ஆகவே ஆஃப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கஸகாஸ்தானில் உள்ள இந்திய விமானப்படையின் ஃபார்கோர் தளத்தில் இருந்து நமது ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களை இயக்கி துல்லிய தாக்குதல் நடத்தலாம் இதன் காரணமாக நமது வீரர்களின் இழப்பையும் தவிர்த்து பயங்கரவாதிகளை ஒடுக்கவும் முடியும். ஆகவே இதுதான் சிறந்த வழியாக இருக்கும்.