இந்தியா பிரம்மாஸ் NG ஏவுகணைக்காக தயாரிக்கப்படும் சிவா IMR POD !!

  • Tamil Defense
  • April 16, 2020
  • Comments Off on இந்தியா பிரம்மாஸ் NG ஏவுகணைக்காக தயாரிக்கப்படும் சிவா IMR POD !!

இந்த சிவா (IMR pod – Imaging and Monopulse Radio Frequency Seeker) எதிரி இலக்குகள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காண உதவும்.இது பிரம்மாஸ் அடுத்த தலைமுறை ஏவுகணையுடன் (Brahmos Next Gen) இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான சோதனைகள் பெங்களுரில் உள்ள இந்திய விமானப்படையின் Aircraft & Systems Testing Establishment, HAL, Brahmos Aerospace மற்றும் IRKUT Corp ஆகியவை இணைந்து மேற்கொள்ளும். இதில் IRKUT Corp நிறுவனம் தான் சுகோய்30 விமானங்களின் Operating systems Source Codesஐ உரிமையை பெற்றுள்ளது. இந்த அமைப்பின் சோதனை அடுத்த வருடம் நடக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் சிவா HADF – High Accuracy Direction Finding Pod, எதிரி வான் பாதுகாப்பு ரேடார்களை துல்லியமாக கண்டறிந்து (Kh- 3P Anti Radiation Missile) KH -3P கதிரியக்க எதிர்ப்பு ஏவுகணையில் அதுகுறித்த தகவல்களை பதிவேற்றி தாக்கி அழிக்க உதவுகிறது. வருங்காலத்தில் இந்த அமைப்பு DRDO NG- ARM Next Generation Anti Radiation Missile உடன் பயன்படுத்தப்படும்.