மிக்25 விமானத்தின் ரகசியம் !!

முன்பு மேற்கத்திய நாடுகளை அஞ்சி நடுங்க வைத்த விமானம் மிக்25 ஆகும்.

நாமும் நமது விமானப்படையில் மிக்25 விமானத்தை வைத்திருந்தோம்.அதனை ஒருமுறை பாக் தலைநகர் இஸ்லாமாபாத் மீது உளவு பார்க்க அனுப்பி அவர்களை நடுங்க வைத்தோம்.

இந்த விமானத்தை ஏதோ சரித்திரத்தில் இதுவரை இல்லாத தொழில்நுட்பம் கொண்ட விமானமாக பார்த்து வந்த நிலையில் 1976ஆம் ஆண்டு சோவியத் விமானப்படை அதிகாரியான விக்டர் பெலென்கோ தனது மிக்25 விமானத்துடன் ஜப்பானில் தரை இறங்கினார்.

இதனை கைபற்றிய அமெரிக்கர்கள் விமானத்தின் ரகசியத்தை அறிந்து கொண்டனர்.

இந்த விமானத்தின் வெற்றிக்கு பின்னால் தொழில்நுட்பம் இல்லை ஆனால் அதிக சக்தி மட்டுமே இருந்தது.

இந்த விமானத்தின் இரண்டு “டுமான்ஸ்கி ஆர்15பி 300” டர்போஜெட் என்ஜின்களின் காட்டுதனமான சக்தி இந்த விமானம் மாக்3.2 வேகத்தில் பறக்க உதவியது.

மேலும் இதன் ஆர்.பி.25 ஸ்மெர்ச் ஏ-25 ரேடாரும் காட்டுதனமான சக்தியை கொண்டது. அதன் 600கிலோவாட் ரேடார் 2மீட்டர் தொலைவில் உயிருடன் இருக்கும் ஒரு முயலை உயிருடன் சமைக்கக்கூடிய அளவுக்கு திறன் கொண்டதாகும்.

வெறுமனே காட்டுதனமான சக்தி கொண்ட என்ஜின் மற்றும் ரேடார் ஆகியவை தான் இந்த விமானத்திற்கு மாயாவி போன்ற அந்தஸ்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.