
கொரானா வைரசை எதிர்த்து போரிட இரஷ்யாவிற்கு இந்தியா ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பியுள்ளது.இது குறித்து பேசிய இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பேஸ்கோவ் இந்தியாவின் இந்த உதவியை மறக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசிலிய அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ ஆகியோரும் இந்தியாவிற்கு தங்களது நன்றியை பதிவு செய்தனர்.
ஹைட்ரோக்சிகுளோரோகுயின் உட்பட பல மருத்துவம்சார் பொருள்களை 26க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.