
கொரானா பிரச்சனை உலகை முழுவதும் அச்சுறுத்தி வரும் வேளையில் அமெரிக்காவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இப்படி பாதிப்பு பெருகி கொண்டிருக்க அமெரிக்காவின் பரம எதிரியாக கருதப்படும் இரஷ்யா தற்போது அமெரிக்காவிற்கு உதவ முன்வந்துள்ளது.
கொரானா பாதிப்பு காரணாக இரஷ்யாவை சில அமெரிக்க அதிகாரிகள் திட்டி வந்தாலும் இந்த மெடிக்கல் சப்ளைகளை ஏற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வந்துள்ளார்.
கடந்த திங்கள் அன்று இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசிமுடித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஒரு விமானம் முழுதும் பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது இரஷ்யா.பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மருத்துவமனைக்கு இந்த சப்ளைகள் உபயோகமாக இருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.மேலும் இரஷ்யா ஒரு விமானம் முழுவதும் பெரிய அளவு மெடிக்கல் சப்ளைகளை அனுப்பியுள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் வேறு சில நாடுகளுக்கும் இரஷ்யா உதவிகள் செய்துள்ளது.
உலகில் எங்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டாலும் முதல் நபராக அமெரிக்கா உதவும்.தற்போது இரஷ்யா அமெரிக்காவிற்கு உதவுவது வரவேற்கத்தக்கது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளும் தங்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளை மறந்து மனிதாபிமான முறையில் உதவிகள் செய்து கொள்வது வரவேற்கத்தக்கதாக உள்ளது.