
மேம்படுத்தப்பட்ட டி90 ப்ரோரீவ் டாங்கிகளின் முதல் தொகுதி ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரஷ்ய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் செர்கி கிசெல் கூறும்போது மேற்கு ராணுவ மாவட்டத்தின் கார்ட்ஸ் டாங்கி படைப்பிரிவிடம் இவை ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த புதிய டாங்கிகளின் TURRET அமைப்பு முற்றிலும் புதியதாகும், மேலும் மிகவும் சக்தி வாயந்த என்ஜினை கொண்டுள்ளது, கூடுதல் சிறப்பாக பிற டாங்கிகளுடன் இலக்குகளை பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளவும், ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்தவும் உதவும் MULTI CHANNEL SIGHTING SYSTEM ஆககயவை பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் டி14 அர்மாட்டா டாங்கில் பூசப்பட்டுள்ள சிறப்பு கலவை ஒன்றும் இதில் பூசப்பட்டுள்ளது.
இந்த புதிய டி90 ப்ரோரீவ் டாங்கிகள் மே9 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளன. ஏறத்தாழ இத்தகைய 50 டாங்கிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.