
இந்தியாவின் ராணுவ வலிமைக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரித்தது.
இந்தியா கடந்த 1974ஆம் ஆண்டில் முதல் அணு ஆயுத சோதனை நடத்திய பின்னர் பாகிஸ்தான் தனது அணு ஆயத தயாரிப்பை தொடங்கியது. இந்தியா 2ஆவது முறை அணு ஆயுத சோதனை செய்த போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே நாளில் 5 அணு குண்டுகள் மற்றுமொரு நாளில் 1 அணு குண்டு சோதனை என 6அணு ஆயதங்களை வெடித்தது பாகிஸ்தான்.
இதை தவிர்த்து அவ்வப்போது அணு ஆயுத தாக்குதல் மிரட்டலையும் விடுத்து வருகிறது. கார்கில் போர் சமயத்திலும் பாகிஸ்தான் அணு ஆயத பிரமோகம் செய்வோம் என மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 150 முதல் 180 அணு அயுதங்கள் வரை வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கு அவற்றால் இந்தியாவை விட அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
1ஆவது ஆபத்து:
அதாவது முதல் பிரச்சினை ஒரு போரின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் படையெடுக்கும் இந்திய படைகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின்
திட்டமாகும். காரணம் ஒரு அணு ஆயுத வெடிப்பினால் வெளிப்படும் கதிரியக்க பொருட்கள் பல லட்சம் பாகிஸ்தானியர்களை கொல்லக்கூடும் அதிலும் குறைந்தது 30கிலோடன் திறன் கொண்ட அணு ஆயுதங்களை பிரயோகித்தால் தான் படையெடுக்கும் இந்திய படைக்கு கடுமையான சேதம் விளைவிக்க முடியும். ஆகவே இது பாகிஸ்தான் மக்களுக்கு தான் அதிக ஆபத்தை விளைவிக்கும்.
2ஆவது ஆபத்து:
மற்ற அணு ஆயுத சக்தி வாய்ந்த நாடுகளின் ராணுவத்தலைவர்களுக்கு அல்லது போர் முன்னனியில் இருக்கும் தளபதிகளுக்கு அணு ஆயுத தாக்குதல் நடத்த உரிமை கிடையாது ஆனால் பாகிஸ்தானில் இது சாத்தகயம். ஆகவே உணர்ச்சி வேகத்தில் ஒரு தளபதி அணு ஆயுத பிரயோகம் செய்தால் இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் சந்தித்தே ஆக வேண்டும்.
மேலும் அங்கு அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான இடியாப்ப சிக்கல் உறவு மற்றொரு பிரச்சினை ஆகும்.
3ஆவது ஆபத்து:
பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்களுக்கு பஞ்சம் இல்லை என்பது உலகறிந்த விஷயம்.
தப்பி தவறி அணு ஆயுதங்களை நகர்த்தும் போது அதனை பயங்கரவாத குழு கைப்பற்றி விட்டாலோ அல்லது உள் பணியாற்றும் நபரை உதவ செய்து அணு ஆயுதம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆகவே தான் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறும்போது பாகிஸ்தானுடைய அணுகுண்டுகள் அவர்களது எதிரிகளை விட அவர்களுக்கு அதிக ஆபத்து விளைவிப்பதாக கூறுகின்றனர்.