கொரோனா போரில் காஷ்மீர், பயங்கரவாதிகளை அனுப்ப தயாராகும் பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • April 7, 2020
  • Comments Off on கொரோனா போரில் காஷ்மீர், பயங்கரவாதிகளை அனுப்ப தயாராகும் பாகிஸ்தான் !!

உலகமே கொரோனாவை சமாளிப்பதை குறித்து யோசிக்கையில், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க பாக் அதிதீவிர முயற்சி செய்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற குப்வாரா என்கவுண்டரில் அத்தகைய பயங்கரவாத குழு ஒன்று வீழ்த்தப்பட்டது.

வடக்கு காஷ்மீரில் ஊரி, கேரன், காலா ருஸ், கர்னா ஆகிய செக்டார்கள் மற்றும் தெற்கு பிர் பான்ஜால் மலையோரம் உள்ள நவ்ஷெரா, மேந்தார், பாலகோட், சவ்ஜியான், சாம்பா மற்றும் ஹிராநகர் செக்டார்கள் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர்.

ஏற்கனவே காஷ்மீரில் சரிந்து வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கமும், காஷ்மீரில் சமாதானம் நிலவி விடக்கூடாது என்ற எண்ணத்திலும் தான் பாகிஸ்தான் தற்போது அதிதீவிரமாக செயல்படுகிறது.

தற்போது காஷ்மீரில் 200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருப்பதாகவும் அவர்களில் 100பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் எல்லை கட்டுபாட்டு கோடருகே பயங்கரவாதிகளுக்கான பொருட்கள் குவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.