இந்திய பதிலடிக்கு பிறகு அதிக அளவு படைகளை எல்லைக்கு நகர்த்தும் பாகிஸ்தான்

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on இந்திய பதிலடிக்கு பிறகு அதிக அளவு படைகளை எல்லைக்கு நகர்த்தும் பாகிஸ்தான்

கடந்த வாரம் குப்வாராவின் கேரன் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவினர்.நமது சிறப்பு படைகளை போலவே பயிற்சி பெற்ற இந்த பயங்கரவாதிகளை வேட்டையாடுவது நமது இராணுவ வீரர்களுக்கு சவாலான பணியாக இருந்தமையால் நமது சிவப்பு படையணி அனுப்பப்பட்டது.

பனிப்பிரதேசத்தில் நடந்த சண்டையில் ஐந்து பயங்கரவாதிகளையும் வீழ்த்தி நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர்.இதனால் இந்திய இராணுவம் கடும் கோபம் கொண்டது.

இதனால் ஆர்டில்லரி தாக்குதலை தொடுக்க முடிவு செய்து இந்திய இராணுவத்தில் ஆர்டில்லரி படைப் பிரிவுகள் போபர்ஸ் ஆர்டில்லரிகளை கட்டவிழ்த்தன.பயங்கரவாத முகாம்கள்,பாக் நிலைகள்,வெடிபொருள் கிடங்குகள் என பல்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் பாக் பக்கம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்தன.இந்நிலையில் பாகிஸ்தான் சந்தேகப்படும் வகையில் தனது படைகளை லீபா சமவெளி மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் பாக்கின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வதோடு அதற்கு ஏற்ற பதிலடியும் வழங்க இராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.