3,800 பயங்கரவாதிகளை கண்காணிப்பில் இருந்து விலக்கிய பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • April 22, 2020
  • Comments Off on 3,800 பயங்கரவாதிகளை கண்காணிப்பில் இருந்து விலக்கிய பாகிஸ்தான் !!

பாகிஸ்தான் அரசு கண்காணிப்பு பட்டியலில் இருந்து சுமார் 3,800 பயங்கரவாதிகளின் பெயர்களை வேண்டுமென்றே நீக்கி உள்ளதாக தெரிகிறது.

நியுயார்க் நகரத்தை தளமாக கொண்டு செயல்படும் “காஸ்டெல்லம்” எனும் அமைப்பு வெளியிட்டுள்ள
தகவலில் இம்ரான் கான் தலைமையிலான
பாகிஸ்தான் அரசு எந்தவித அறிவிப்பும் இன்றி பாதிக்கு பாதி எனும் அளவில் பயங்கரவாதிகள் பெயரை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பட்டியலில் பல முக்கிய பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவன் ஸாகி உர் ரெஹ்மான் லாக்வியின் பெயரும் விலக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டில் 7600 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலில் இருந்து கடந்த 18 மாதங்களில் 3,800 பயங்கரவாதிகளின் பெயர்கள் விலக்கப்பட்டுள்ளன அதிலும் குறிப்பாக மார்ச் 9 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,800 பெயர்கள் விலக்கப்பட்டுள்ளன.

இது பாகிஸ்தான் பச்சையாக பயங்கரவாதிகளை ஆதரித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது.