கொரோனா தொற்றுள்ள பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாக் திட்டம் !!

  • Tamil Defense
  • April 9, 2020
  • Comments Off on கொரோனா தொற்றுள்ள பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாக் திட்டம் !!

உலகமே கொரோனாவை ஒழிக்க முயன்று வருகையில் பாகிஸ்தான் மட்டும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு தனது தீய எண்ணங்களை செயல்படுத்த நினைக்கிறது.

ஏற்கனவே பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்று வருகையில், தற்போது கொரோனா தொற்று கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி கொரோனாவை பரவ வைக்க முயற்சி செய்கிறது அம்பலமாகி உள்ளது.

இந்திய உளவுத்துறை இடைமறித்த சில தகவல்களின் படி பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் பலர் கொரோனா தொற்று கொண்டவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 2ஆம் தேதி பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பி ஒரு குழு ஊடுருவி பதுங்கி உள்ள நிலையில் இவர்கள் கொரொனா தொற்று கொண்டவர்களா எனும் சந்தேகம் வலுக்கிறது.

இத்திட்டத்தின் சூத்திரதாரி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவனான ஹஃபீஸ் சயீத் ஆவான், இவனே நேரடியாக பாகிஸ்தானுடைய சிந்த் மாகாணத்திற்கு சென்று இதற்கென ஆள் சேர்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி அளித்த வரும் பாக் ராணுவ வீரர்களில் சுமார் 600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரியாஸ் நாய்க்கூ எனும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தளபதி தனது இயக்க உறுப்பினர்களிடையே கொரொனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதை கவனித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.