Breaking News

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்-எதற்கும் தயார் என பேச்சு

  • Tamil Defense
  • April 25, 2020
  • Comments Off on கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்-எதற்கும் தயார் என பேச்சு

சனியன்று பாக் கடற்படை அராபியன் கடல்பகுதியில் தொடர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறியுள்ளது.போர்க்கப்பல்கள்,போர்விமானம் மற்றும் வானூர்திகளில் இருந்து ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டதாக அந்நாட்டு கடற்படை செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் அர்சித் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் சோதனைகள் பாக் கடற்படை தளபதி அட்மிரல் ஜாபர் மஹ்மூத் அப்பாசி முன்னிலையில் நடத்தப்பட்டன.சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது பாக் கடற்படையின் திறனை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

எதிரியின் எந்த வித சவாலையும் எதிர்கொள்ள பாக் கடற்படை முழு பலத்துடன் உள்ளதாக பாக் கடற்படை அட்மிரல் அப்பாசி தெரிவித்துள்ளார்.