கடந்த ஃபெப்ரவரி மாதத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் அருகே தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை நகர்த்தி வருகிறது. இவை லாஹுர் நகரில் உள்ள முக்கிய படைத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது இந்த நகர்வு குறித்த சில செயற்கைகோள் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த அமைப்பு சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கிய எல்.ஒய் 80எனும் வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்த அமைப்பானது சுமார் 40கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை கண்டுபிடித்து தாக்கும் திறன் கொண்டது மேலும் இத்தகைய ஒரு அமைப்பில் 6ஏவுகணைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நகர்வு நடைபெற்றுள்ளதும், அதிக அளவில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க திட்டமிட்டு இருக்கும் பாகிஸ்தான் தப்பித்தவறி இந்தியா இனியொரு பாலகோட் தாக்குதலை நடத்தி விடக்கூடாது என்பதற்காக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.