கில்ஜித் பல்டிஸ்தான் மாகாணத்தில் கொரொனாவை காரணமாக வைத்து அதிகளவில் படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் ராணுவம் !!

  • Tamil Defense
  • April 8, 2020
  • Comments Off on கில்ஜித் பல்டிஸ்தான் மாகாணத்தில் கொரொனாவை காரணமாக வைத்து அதிகளவில் படைகளை நகர்த்தும் பாகிஸ்தான் ராணுவம் !!

பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரான அம்ஜாத் அயூப் கூறுகையில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு ஏதுவாக படைகளை நகர்த்துவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளதாகவும், ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் மாகானத்தில் ராணுவ கட்டுபாட்டை கொண்டு வரவே இம்முயற்சி என்கிறார்.

கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அதிகளவில் ராணுவ படைகளை பாகிஸ்தான் நகர்த்துகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே பாகிஸ்தான் அரசு இந்த மாகாணங்களில் கொண்டு வைப்பதாகவும் இதன் காரணமாக அந்த மாகாண மக்களுக்கு மிகப்பெரிய அபாயம் இருப்பதாகவும், இப்பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுளள்தாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே இந்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.