
குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் ஒகா கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் மீது பாகிஸ்தான் மரைன் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
மீன்பிடிக்க சென்ற நமது மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டியதால் பாக் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதனால் நமது மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்,
இதனையடுத்து பாக் மரைன்களை தொடர்பு கொண்ட நமது அதிகாரிகள் இரண்டு படகுகளையும் மீட்டு அரின்ஜய் எனும் கப்பல் பாதுகாப்பு அளிக்க பத்திரமாக கரை சேர்த்தனர்.