சற்றும் குறையாத ஊடுருவல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் !!

தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே சமீபத்தில் அளித்த பேட்டியில் “பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும், இவர்களை ஊடுருவ வைப்பதற்காக பாக் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது” என குறிப்பிட்டார்.

தற்போது கொரோனா பரவி வரும் சூழலையும் சமாளித்து எல்லை மற்றும் உட்பகுதிகளில் ராணுவம் பயங்கரவாதத்தையும் ஒடுக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ராணுவம் சிறப்பாக செயல்பட்டு பனிக்கால ஊடுருவலை பெருமளவில் தடுத்துள்ளது மேலும் கடுமையான கட்டுபாடுகள் காரணமாக பயங்கரவாத அமைப்புகளின் ஆட்சேர்ப்பு பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.