நவீன சீன டாங்கிகளை பெறும் பாக் ராணுவம் !!
1 min read

நவீன சீன டாங்கிகளை பெறும் பாக் ராணுவம் !!

சீனாவின் நோரின்கோ நிறுவனம் பாகிஸ்தான் ராணுவத்துகான தனது விடி4 டாங்கிகளின் டெலிவரியை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

சீனாவின் பாட்டோவ் நகரில் உள்ள நோரின்கோ தொழிற்சாலையில் இருந்து வெடிபொருள் எதிர்ப்பு கவசம் பொருத்தப்பட்ட விடி4 ரக டாங்கிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டில் பாகிஸ்தான் 100 டாங்கிகளை தனது ராணுவத்திற்கென வாங்க இந்த விடி4 டாங்கியை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த டாங்கி அதிநவீன போர்முறைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் செயல்திறன் உலகின் சிறந்த டாங்கிகள் வரிசையில் விடி4 டாங்கியை இடம்பெற வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விடி4 டாங்கியின் மீது நமீபியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.