
கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு ஹார்ப்பூன் ஏவுகணைகள் மற்றும் மார்க்54 நீரடிகணைகள் விற்பதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்து தற்போது அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் “இந்த ஆயுத ஒப்பந்தம் தெற்காசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் ஏற்கனவே கொதி நிலையில் உள்ள இந்திய பாக் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் அலறி வருகிறது.
பாக் வெளியுறவு செயலர் ஆய்ஷா ஃபருக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா பாகிஸ்தான் மீது பயங்கரவாத தொஞர்புகள் இருப்பதாக வீண்பழி போடுவதாகவும், இந்த ஆயுத ஒப்பந்தம் தெற்காசியாவில் ராணுவ சமநிலையை பாதிக்கும் எனவும், பல நாடுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமெரிக்க அரசு பதிலடியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆயுத ஒப்பந்தம் எந்த வகையிலும் யாரையும் பாதிக்காது என தெரிவித்துள்ளது.