பாகிஸ்தானில் கொரானா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.அங்கும் அதிகமான நபர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் உதவியை பாக் நாடியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பாகிஸ்தான் வேண்டியுள்ளது.இதற்கு முன் அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் வேண்டியிருந்தன.அந்த லிஸ்டில் தற்போது பாகிஸ்தானும் இணைந்துள்ளது.
ஹைட்ரோக்சிகுளோரோகுயின் ஒரு மலேரியா எதிர்ப்பு மாத்திரை ஆகும்.தனது நாட்டில் 6000க்கும் மேற்பட்டோர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதன் பிறகே தற்போது இந்தியாவிடம் பாகிஸ்தான் உதவி கேட்டுள்ளது.