பூஞ்ச் பகுதியில் பாக் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on பூஞ்ச் பகுதியில் பாக் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லைக் கோடு பகுதியில் பாக் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

நமது வீரர்கள் மரணத்திற்கு பிறகு இராணுவம் ஆர்டில்லரிகள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்திய இராணுவத்தின் ஆர்டில்லரி படைப் பிரிவுகள் போபர்ஸ் ஆர்டில்லரிகளை கட்டவிழ்த்தன.பயங்கரவாத முகாம்கள்,பாக் நிலைகள்,வெடிபொருள் கிடங்குகள் என பல்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தற்போது பூஞ்சின் கஸ்பா மற்றும் கிர்னி செக்டார்களில் பாக் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.