வருகிற மே மாதம் சீனா தனது பெய்டோ வழிகாட்டி தொழில்நுட்பத்திற்கான கடைசியும் 54ஆவது செயற்கைகோளையும் ஏவ உள்ளது. அமெரிக்கா ஜிபிஎஸ், ரஷ்யா க்ளோனாஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கலிலியோ ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் நாவிக் என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம்.
இந்த பெய்டோ தொழில்நுட்பமானது வாகனங்கள், கப்பல்கள் , விமானங்கள், விவசாயம் மற்றும் வனத்துறை ஆகியவற்றிற்கு சேவை அளிக்கிறது. மேலும் ராணுவ சேவையையும் இதனால் வழங்க முடியும். சீன ராணுவம் பல வருடங்களாக தனது வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் இந்த வசதியை பயன்படுத்தி வருகிறது.
இது பற்றி சீனாவின் தேசிய செயற்கைகோள்
வழிகாட்டி மையத்தில் பணியாற்றி வரும் ரான் செங்கி கூறும்போது “பெய்டோ தொழில்நுட்பம் 2.5மீட்டர் அளவுக்கு துல்லியம் கொண்டது இதனை சென்டிமீட்டர் அளவுக்கு துல்லியத்தை அதிகரிக்க உள்ளோம்” என்றார்.
இதில் இந்தியாவிற்கு கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் கடந்த இந்த பெய்டோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. 2014ஆம் ஆண்டு முதல் கராச்சி நகரில் ஒரு மையத்தை சீனா அமைத்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தின் ராணுவ வசதிகளை பயன்படுத்தி கொள்ளும் உரிமையை பெற்றுள்ள முதல் வெளிநாடு பாகிஸ்தான் ஆகும், இதன் மூலம் பாகிஸ்தான் ஏவுகணைகள் மேலும் துல்லியமாக தாக்கும் வசதியை பெறும்.
செயற்கைகோள் வழிகாட்டி அமைப்புகள் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்கள் சுமக்கும் ஆயுதங்களுக்கு இத்தகைய தொழில்நுட்பம் இன்றியமையாதது ஆகும்.மேலும் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள் ஆகியற்றை வாங்கி வருகிறது மேலும் பாகிஸ்தான் தனது சொந்த பலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது ஆனால் பாகிஸ்தானுக்கு விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி செய்ய இயலாத சூழல் உள்ளது ஆகவே பாகிஸ்தான் இத்தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டிய சூழல் அதிகரிக்கிறது.