பாக் அத்துமீறல் – 3 பொதுமக்கள் மரணம் !!

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on பாக் அத்துமீறல் – 3 பொதுமக்கள் மரணம் !!

இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுபாட்டு கோடருகே உள்ள தாங்தார் மற்றும் கர்ணா செக்டார்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்திய நிலைகளான பிளாக் ராக், ஷராரத், ஜல் மற்றும் அணில் நகலைகளை தாக்கியது . ஆனால் பெரும்பாலான குண்டுகள் கிராமங்களில் விழுந்தமையால் கடும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் இத்தாக்குதலில் சவ்கிபால் பகுதியை சேர்ந்த ஷமினா பேகம் மற்றும் ஜாவீத் கான் ஆகியோரும் தும்னா கிராமத்தை சேர்த்து 8 வயது சிறுவன் ஸயன் ஆகியோரும் துரதிர்ஷ்டவசமாக மரணத்தை தழுவினர்.