பூஞ்ச் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்

  • Tamil Defense
  • April 17, 2020
  • Comments Off on பூஞ்ச் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்

வெள்ளி அன்று பாக் இராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பூஞ்ச செக்டார் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து மோர்ட்டார் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

13வது நாளாக இன்றும் மோர்ட்டார் தாக்குதல் மற்றும் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகிறது.

பூஞ்ச் மற்றும் இராஜோரி மாவட்டங்களில் உள்ள மூன்று செக்டார்களிலும் இந்த தாக்குதலை பாக் இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

காலையில் 11 மணிக்கு பூஞ்சில் உள்ள கஸ்பா மற்றும் கிர்னி செக்டார்களில் பாக் இராணுவம தாக்கயது என லெப் ஜென் தேவேந்தர் ஆனந்த் கூறியுள்ளார்.

பாக்கிற்கு தகுந்த பதிலடியை இந்திய இராணுவமும் அளித்துவருவதாக அவர் கூறியுள்ளார்.