பாக் உதவியுடன் காஷ்மீரில் 2 புதிய பயங்கரவாத இயக்கங்கள் !!

  • Tamil Defense
  • April 17, 2020
  • Comments Off on பாக் உதவியுடன் காஷ்மீரில் 2 புதிய பயங்கரவாத இயக்கங்கள் !!

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ ஆகியவை சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா ஆகியவை இணைந்து காஷ்மீரில் “தி ரெஸிஸ்டன்ஸ் ஃபரான்ட்” மற்றும் “தெஹ்ரிக் இ மிலாத் இ இஸ்லாமி” எனும் இரண்டு புதிய பயங்கரவாத இயக்கங்களை தோற்றுவித்துள்ளன.

தெஹ்ரிக் இ மிலாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவன் நயீம் ஃபிர்தவுஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில் காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளான்.

அதை போல் தி ரெஸிஸ்டன்ஸ் ஃபரான்ட் அமைப்பின் தலைவன் அபு அனாஸ் வெளியிட்டுள்ள ஆடியோவில் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் செய்ய அழைப்பு விடுத்துள்ளான், மேலும் இந்தியாவுக்கு ஆதரவான காஷ்மீரிகளை கொலை செய்வோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளான்.

இந்த இரண்டு குழுக்களும் சமுக வலைதளங்களில் மிக வேகமாக இயங்கி வருவதாகவும், காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஜிஹாத் செய்ய சேர்க்க திட்டமிட்டு உள்ளனர்.

தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் அமைப்பின் பயங்கரவாதிகளான காஷ்மீரின் சோபோரை சேர்ந்த அஹ்திஷாம் ஃபருக் மாலிக், ஷஃப்கத் அலி தாகோ, முசைப் ஹசன் பாட் மற்றும் நிஸார் அஹமது கனாய் ஆகியோர் மார்ச் மாதம் கைது செய்யப்படனர்.
அவர்களிடம் இருந்து மிக பெரிய அளவில் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நபரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டதாக கூறியுள்ளனர். இந்த குறிப்பிட்ட நபர் டெலிக்ராம் செயலியில் “ஆண்ட்ரு ஜோன்ஸ்” எனவும் வாட்சாப்பில் “கான் பிலால்” எனவும் புனைப்பெயருடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது மேலும் இவன் தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட அமைப்பை தோற்றுவித்ததில் முக்கிய பங்காற்றியவன் ஆவான்.