தள்ளிப்போகும் பி8 விமானங்களின் டெலிவரி !!

  • Tamil Defense
  • April 15, 2020
  • Comments Off on தள்ளிப்போகும் பி8 விமானங்களின் டெலிவரி !!

இந்தியா வாங்கவுள்ள இரண்டாவது தொகுதிக்கான 4 பி8 விமானங்கள் இந்த மாத இறுதியில் ஒப்படைக்கப்படுவதாக இருந்தது ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த டெலிவரி தள்ளிப்போகிறது.

இந்த தொகுதியில் உள்ள முதல் விமானம் ஜூலை மாதம் வருவதாகவும், மற்ற 3 விமானங்கள் அடுத்த வருடம் தான் வரும் எனவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 8 “பி8” விமானங்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி படைத்தளத்தில் இருந்து இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்கும் வகையில் இயங்கி வருகின்றன.

இந்த புதிய 4 விமானங்களும் கோவாவின் தாபோலிமில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்ஸா படைத்தளத்தில் இருந்து பாகிஸ்தான் கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளன.

இதை தவிரத்து மேலும் 6 பி8 விமானங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பி8 விமானங்கள் இந்தியாவின் கடல்பரப்பை நண்கு கண்காணிக்கவும், நீர்மூழ்கி எதிர்ப்பு போர்திறனை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.