அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் பணிபுரிந்த 10% மாலுமிகளுக்கு கொரானா தொற்று-அமெரிக்க கடற்படை

  • Tamil Defense
  • April 13, 2020
  • Comments Off on அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் பணிபுரிந்த 10% மாலுமிகளுக்கு கொரானா தொற்று-அமெரிக்க கடற்படை

அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி கப்பலில் பணிபுரிந்த 4800 மாலுமிகளில் 10% பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

கப்பலில் பணிபுரிந்த 92% மாலுமிகளுக்கு இதுவரை கொரானா தொற்று சோதிக்கப்பட்டுள்ளது.அதில் 550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்றும் 3673 பேருக்கு கொரானா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் அதன் கேப்டன் பிரேட் க்ரோசியர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.இந்த பிரச்சனையை வெளியுலகுக்கு தெரியப்படுத்திய காரணத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.