ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் உருவாக்கியுள்ள ரிமோட் கன்ட்ரோல் ஆயுத அமைப்பு !!

நமது ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் உருவாக்கியுள்ள இந்த ரிமோட் கன்ட்ரோல் ஆயுத அமைப்பு (RCWS – REMOTE CONTROLLED WEAPON STATION) கடந்த ஃபெப்ரவரி மாதம் லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் (DefExpo) இடம் பெற்றிருந்தது.

இந்த ஆயுத அமைப்பில் ஒரு ரஷ்ய NSVT 12.7மிமீ அளவுள்ள ஒரு கனரக இயந்திர துப்பாக்கி (HMG – Heavy Machine Gun) பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஆயுத அமைப்பில் இது மட்டுமில்லாது AGL – Automatic Grenade Launcher), ATGM – Anti Tank Guided Missile ஆகியவற்றையும் இணைத்து பயன்படுத்த முடியும்.

இந்த RCWS ஆயுத அமைப்பை முதலில் பெறுவது அர்ஜூன் மார்க்1ஏ டாங்கி ஆகும், மேலும் பல்வேறு வகையான கவச வாகனங்கள், ரோந்து படகுகள் ஆகியவற்றிலும் இது பயன்படுத்தி கொள்ளப்படும்.

இந்த ஆயுத அமைப்பானது ஒரு வீரர் தனது வாகனம் அல்லது டாங்கி அல்லது படகினுள்ளேயே இருந்தவாறு வெளியில் உள்ள சூழலை கண்காணித்து இலக்குகளை பாதுகாப்பாக இருந்து கொண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்க உதவுகிறது.

இந்த ஆயுத அமைப்பு மூலம் இந்தியா ரிமோட் கன்ட்ரோல் ஆயுத அமைப்புகளுக்கான.சர்வதேச சந்தையில் கால்பதிக்க எண்ணுகிறது. இந்த ஆயுத அமைப்பில் Laser Range finder, Thermal Imaging Camera, Daylight TV camera, Traditional Sensor Suit ஆகிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.