பாக் சென்ற சீன கப்பலில் இருந்த அணு ஆயுத ஏவுகணை கருவி, பறிமுதல் செய்த இந்தியா !!

  • Tamil Defense
  • April 14, 2020
  • Comments Off on பாக் சென்ற சீன கப்பலில் இருந்த அணு ஆயுத ஏவுகணை கருவி, பறிமுதல் செய்த இந்தியா !!

சமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி சென்ற “டாய் சுய் யுன்” என்ற சீன நாட்டு கப்பலில் அணு ஆயுத ஏவுகணை செய்ய பயன்படும் AUTOCLAVE என்ற கருவி இருந்ததாக நமது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க கப்பலை காண்ட்லா துறைமுகத்தில் மடக்கி சோதனை செய்தனர்.

DRDO உதவியுடன் நடந்த இந்த சோதனையில் AUTOCLAVE கருவி இருந்தது உறுதி செய்யப்பட்டது, அந்த கருவியை பறிமுதல் செய்த பின் அக்கப்பல் விடுவிக்கப்பட்டது.

இந்த AUTOCLAVE கருவி 18மீட்டர் நீளம் மற்றும் 4மீட்டர் அகலம் கொண்டது, மேலும் சுமார் 1500கிமீ க்கும் அதிகமான தாக்குதல் வரம்பு கொண்ட அணு ஆயுதம் சுமக்கும் ஏவுகணைகளின் என்ஜின் மோட்டார் தயாரிக்க அல்லது செயற்கைகோள் என்ஜின் மோட்டார் தயாரிக்க பயன்படும் என DRDO அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுடைய அணுசார் திட்டங்கள் அனைத்திற்கும் சீனா மிகவும் உதவி வருகிறது என்பதோடு இத்தகைய சப்ளைகள் குறித்து நாம் எச்சரிக்கை ஆக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

இந்த கருவியை தொழிற்சாலை சார்ந்த கருவி என பதிவு செய்து இஸ்லாமாபாத்தை சேர்ந்த UNITED CONSTRUCTION COMPANY வாங்கியுள்ளது.

தற்போது இந்த கருவி பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்தியா பேரழிவு ஆயுதங்கள் சட்டம் 2005 ஐ பயன்படுத்தி சர்வதேச அளவில் பிரச்சினையை எழுப்ப வேண்டும் மட்டுமல்ல 2004ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1540தின் படியும் பிரச்சினை எழுப்ப வேண்டும்.

இந்த சீன பாகிஸ்தான் உறவு மூலம் நாளுக்கு நாள் ஆபத்து அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.