அறுவைசிகிச்சைக்குப் பின்னர் வட கொரிய தலைவர் பெரும் ஆபத்தில் உள்ளார்- சிஎன்என்

  • Tamil Defense
  • April 21, 2020
  • Comments Off on அறுவைசிகிச்சைக்குப் பின்னர் வட கொரிய தலைவர் பெரும் ஆபத்தில் உள்ளார்- சிஎன்என்

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெரும் ஆபத்தில் உள்ளார் என அமெரிக்கா உளவுத்துறை கூறியதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிம் சமீபத்தில் தனது தாத்தாவின் பிறந்தநாளை ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாட தவறவிட்டார், இது அவரது உடல்நிலை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசாங்க கூட்டத்தில் கடைசியாக காணப்பட்டார்.

மற்றொரு அமெரிக்க அதிகாரி திங்களன்று சி.என்.என் பத்திரிகையிடம் கிம்மின் உடல்நலம் குறித்த கவலைகள் நம்பகமானவை, ஆனால் தீவிரத்தை மதிப்பிடுவது கடினம் என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 12 அன்று கிம் அவர்களுக்கு கார்டியோவாஸ்குலர் அமைப்பு பொருத்தப்பட்டதாக வடகொரியா பற்றி செய்தி வெளியிட்டது தென் கொரியப் பத்திரிக்கை ஒன்று.

ஆனால் அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக தென் கொரிய பத்திரிக்கை தகவல்கள் வெளியிட்டாலும் அதை உறுதிப்படுத்தமுடியவில்லை என சிஎன்என் நிறுவனம் கூறியுள்ளது.