முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் நடந்த தாக்குதல் குறித்த விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு அமைப்பு !!

  • Tamil Defense
  • April 3, 2020
  • Comments Off on முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் நடந்த தாக்குதல் குறித்த விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு அமைப்பு !!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு தேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி ஆஃப்கானிஸ்தானத்தில் சமீபத்தில் சீக்கிய குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதல் குறித்த விசாரணையை மேற்கொள்ள தேசிய புலனாய்வு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புக்கான சட்டத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்தியர்கள் மீதும் இந்திய நலன்களுக்கு எதிராகவும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில் முதலில் ஆஃப்கானிஸ்தான் அரசிடம் இருந்து இந்த தாக்குதல் குறித்த தகவல்களை கோரியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றதும் தேசிய புலனாய்வு அமைப்பின் குழு ஒன்று ஆஃப்கானிஸ்தான் செல்லும் எனவும் கூறினார்.

இந்த கொடுர தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.