இந்தியாவின் இருபுறமும் சீனா மற்றும் பாகிஸ்தான் அதிநவீன டாங்கிகளை பெறும் அல்லது உருவாக்கும் முயற்சியில் உள்ளன. உக்ரைனுடைய “டி84 – ஒப்லாட்” டாங்கிகளை பெற முயற்சிக்கிறது மேலும் சீனாவும் அடுத்த தலைமுறை டாங்கிகளை தயாரித்து வருகிறதாகவும் தெரிகிறது.
எதிர்கால பிரச்சினைகழை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை டாங்கிகள் வடிவமைக்கப்படும், டாங்கியின் எடை, குழு, ஆயுத அமைப்பு, இயக்க வரம்பு, கண்காணிப்பு-இலக்கு கண்டறிதல்- போன்ற விஷயங்களை கருத்தில் கொள்வர்.
முக்கிய போர் டாங்கி என்பது “இரும்பு முக்கோணம்” எனும் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுபவை ஆகும். இந்த தத்துவத்தின் மூன்று அம்சங்கள்
1) தாக்குதல் திறன்
2) போக்குவரத்து திறன்
3)பாதுகாப்பு
அடுத்த தலைமுறை டாங்கிகள் என்பவை அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பரிணாம வளர்ச்சி பெற்ற நவீன டாங்கிகள் ஆகும். இது டாங்கி போர்முறையில் ஒரு புரட்சியை ஏறபடுத்தும் அமைப்பாகும்.
தற்போதைய் காலகட்டத்தில் ஹெலிகாப்டர்கள், தனிமனிதன் மற்று வாகனங்களில் இருந்து ஏவப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக விளங்குகின்றன. மேலும் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்தும் தப்பிக்க வேண்டும். ஆகவே டாங்கிகள் என்பவை மிகப்பெரிய அளவில் தற்பாதுகாப்புக்கான வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.
இந்த அடுத்த தலைமுறை டாங்கிகள் வடிவமைப்பில் ஆளில்லாமல் இயங்கும் திறனையும் கருத்தில் கொள்ளலாம் ஆனால் தற்போதைய சூழலில் கருவிகளும் மனிதர்களும் இணைந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
அதன்படி இந்த டாங்கியின் வடிவமைப்பு இருவர் பயணிக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது. மேலும் டி14 அர்மட்டா டாங்கிகளை போன்று இலக்குகளை கண்டறிந்து குறிவைக்க
ஒரு மென்பொருள் அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த டாங்கியில் பாதுகாப்புக்கென ஒரு காப்ஸீயூல் போன்ற அமைப்பில் கனரக கவசங்கள் பொருத்தபட்ட அமைப்பு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
பொதுவாக முக்கிய போர் டாங்கிகள் உலகம் முழுவதும் 30 முதல் 45டன்களுக்கு இடைப்பட்ட வகையில் இருக்கும். ஆகவே இந்த அடுத்த தலைமுறை டாங்கிகள் மற்ற வடிவமைப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு எடையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.