சாங்க்யா லேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் மற்றும் தலைமை அதிகாரியுமான பரக் நாயக் கூறும்போது இந்திய தரைப்படைக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கி வருகிறோம், இந்த அமைப்பு 5ஜி மற்றும் 6ஜி அலைகற்றைகளில் இயங்க கூடியது என்பது கூடுதல் சிறப்பாகும் என்றார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே முழுவதும் தயாரான பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாயந்த அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள் நமது படைகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ள சில அடிப்படை தொழில்நுட்பங்களை பற்றி காணலாம்.
SDR CHIPSETS
இந்த SDR – Software Defined Radio சிப்கள் தகவல் தொடர்பு அமைப்பு பல்வேறு அலைவரிசைகள் மற்றும் ஒளிபரப்பு தரத்தில் இயங்க உதவும் அத்துடன் இது மிக மிக குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே உபயோகிக்கும். இந்த சிப்கள் அதி உயர்திறன் கொண்டவையாகும்.
சாங்க்யா நிறுவனம் இதற்கென “ப்ருத்வி 3” எனும் சிப்பை உருவாக்கி உள்ளது. இது செயற்கைகோள் தொடர்பு , ராணுவ தொடர்பு என பல்வேறு இடங்களில் பயன்படும்.
S – Band SAT PHONES
இது குறித்து பரக் நாயக் அவர்கள் கூறும்போது எங்கள் நிறுவனம் இஸ்ரோவின் MSS திட்டத்தில் பங்குதாரராக உள்ளோம் அதனை சார்ந்த SDR சிப்களை அடிப்படையாக கொண்டு நாங்கள் உருவாக்கியது தான் சாம்ராட் எஸ் அலைவரிசை சாட்டிலைட் போன் (SAMRAT S – Band SAT Phone).
இது இருவழி தகவல் தொடர்பு சாதனமாகும், Voice, Data, SMS, Geo location போன்ற சேவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் ஒரு சாதாரண ஆண்டராய்ட் போனை கூட இது சார்ந்த ஒரு செயலி முலம் சாட்டிலைட் போனாக மாற்ற முடியும்.
மேலும் இது மிகவும் பாதுகாப்பானது, தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு இல்லாத இடங்களிலும் கூட இதனை பயன்படுத்த முடியும்.
UHF IP Radios for perimeter security & Long Range Communication:
இவர்களது அதிஉயர்திறன் அலைவரிசை சார்ந்து இயங்கும் ரேடியோ அமைப்புகள் MEGHDOOT BASE STATION மற்றும் DHAVAL CPE MODEM ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இது சுமார் 12கிமீ இயக்க வரம்பு கொண்ட அமைப்பாகும் இதன் மையப்பகுதியில் MEGHDOOT BASE STATIONம் தொலைதூர பகுதிகளில் DHAVAL CPE MODEM ஆகியவை நிறுவப்பட்டு இயக்கப்படும்.
DHAVAL CPE MODEMஐ Infra red சென்சார் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களுடன் இணைத்து குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்கும் பயன்படுத்த முடியும்.
SATELLITE based VESSEL TRACKING SYSTEMS:
இது கடல்சார் பாதுகாப்பு அமைப்பாகும், இதற்கென NAVDOOT எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இதில் பயன்படுத்தப்படும்
IP67 Compliant Terminal கடல்நீர் மற்றும் தூசு ஆகியவற்றில் இருந்து சிறந்த பாதுகாப்பு அளிக்கிறது.
மேலும் இது GPS/GLONASS ஆகிய செயற்கைகோள் வழிகாட்டி அமைப்புகளுடனும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் நமது சொந்த NAVIIC அமைப்பிலும் இயங்கும்.
கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் மீன்பிடி படகுகளுடன் தொடர்பு கொள்ளவும் கண்காணிக்கவும் இது உதவுகிறது, மேலும் சர்வதேச எல்லையை படகுகள் கடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிக்கவும் எச்சரிக்கவும் முடியும். இது ஆழ்கடலிலும் திறம்பட இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு அனைத்து இந்திய கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளிலும் பொருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
5G & 6G based Next Gen Comm systems:
ORAN – Open Radio Access Networkஐ அடிப்படையாக கொண்ட 5G மற்றும் தகவல் தொடர்பு தேவைக்கேற்ப சுயமாக தன்னை தானே தகவமைத்து கொள்ளும் சுயசிந்தனை திறன் கொண்ட 6G (6G – AI Based Cognitive ORAN) அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு சாதனங்களை உருவாக்கி வருவதாக சாங்க்யா நிறுவனம் தெரிவித்துள்ளது.