பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான பாதுகாப்புத்துறை கண்காட்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகிற 2021ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 3-7 வரை பெங்களூர் ஏலஹங்கா விமானப்படை தளத்தில் இந்த கண்காட்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரோ இந்தியா விமான கண்காட்சியானது விமான விரும்புகளுக்கு பெரிய வரமாகும். இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியை காண காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் ஒரு விபத்து நிகழ்ந்து ஒரு விமானி இறந்ததும், பல கார்கள் எரிந்து சாம்பலானதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை சமாளித்து மேற்கொண்டு நிகழ்வுகள் சுமுகமாக செல்ல விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே. பதவ்ரியா அவர்கள் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்வினை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு மாற்ற இருந்தபோது விமானப்படை பல தொழில்நுட்ப மற்றும் இடவசதி சிக்கல்களை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்ததால் பின்னர் பாதுகாப்பு அமைச்சகம் இம்முடிவை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.