
கடந்த 20 நாட்களில் உலக நாடுகள் செய்தவை..!
1)சீனா தனது லயோனிங் விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுவை தைவானுக்கு அருகே நகர்த்தியுள்ளது.
2) திபத்தில் சீனா சிறிய அளவிலான அணுச்சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு ஏற்றவாறு இந்தியா மற்றும் ஆப்கனில் நில அதிர்வு உணரப்பட்டது.
3) இரஷ்யா செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்தது.இச்சோதனையில் A235 Nudol PL19 ரக செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே 800கிமீ தொலைவில் உள்ள ப்லெஸெட்ஸ்க் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தபட்டதாக தெரிகிறது.
4)வட கொரியா தனது கிழக்கு கடற்படை பகுதியில் ஏவுகணை சோதனை செய்தது
5) அனுமதியே இல்லாமல் சிரியா மற்றும் லெபனான் நாட்டில் 20க்கும் மேற்பட்ட முறை குண்டுவீசி தாக்கியது இஸ்ரேல்
6) போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏமனில் குண்டுவீசியது சௌதி அரேபியா
7) அனுமதி இல்லாமல் சிரியா மற்றும் ஈராக்கில் குண்டுவீசி தாக்கியது துருக்கி
8)ஹோர்முஸ் வளைகுடா பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஈரான் போர்க்கப்பல்கள் அமெரிக்க போர்க்கப்பல் குழுவை பின் தொடர்ந்தது.
9) பாக் அதிக அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தி இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது.
10) அமெரிக்கா குவாம் தீவில் குண்டுவீசு விமானங்களை நிறுத்தியுள்ளது.மேலும் குவாரன்டைன் முடிந்ததும் அமெரிக்கா தனது போர்க்கப்பல் குழுவை பசிபிக் அனுப்ப திட்டமிட்டுள்ளது.