COVID19 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள நவீன தூய்மை படுத்தும் கருவிகள் !!

  • Tamil Defense
  • April 4, 2020
  • Comments Off on COVID19 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள நவீன தூய்மை படுத்தும் கருவிகள் !!

கொரோனா தொற்றை ஒழிக்க பாதுகாப்பு அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக முப்படைகள் மற்றும் ஆயுத தயாரிப்பு பிரிவுகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றன.

தற்போது DRDO இரண்டு வகையான தூய்மைப்படுத்தும் கருவிகளை தயாரித்துள்ளது இவற்றை தில்லியில் உள்ள வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தயாரித்துள்ளது.

1) முதலாவது வகை முதுகில் சுமந்து செல்லும் வகையிலானது இதனை (PORTABLE BACKPACK AREA SANITISATION EQUIPMENT – PBASE) என அழைக்கின்றனர்.இதில் ஒரு சதவிகிதம் ஹைப்போக்ளொரைட் (HYPOCHLORITE) கலந்த சுத்தப்படுத்தும் கலவை இருக்கும். இது குறைந்த அழுத்தம் கொண்ட இரு திரவங்களை பயன்படுத்துகிறது இதனுடன் காற்றும் சேர்ந்து அதிவேகத்தில் வெளியேறும் போது மிக சிறிய பனி போல் படரும். இதனை கொண்டு பேருந்து நிலையங்கள், அலுவலகங்கள், மருத்துவர் அறைகள், வரவேற்பறைகள், மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். இது சுமார் 300 சதுரமீட்டர்கள் அளவிலான இடத்தை சுத்தப்படுத்த உதவும்.

2) இரண்டாவது வகை TROLLEY MOUNTED LARGE AREA SANITISATION EQUIPMENT அதாவது சிறிய வண்டிகளில் பொருத்தப்பட்ட சுத்தப்படுத்தும் கருவிகள் .

இக்கருவியை கொண்டு சுமார் 3000 சதுரமீட்டர்கள் அளவிலான இடத்தை தூய்மை படுத்த முடியும்.இதுவும் முந்தைய கருவியை போன்றே இயங்கும்.

10 முதல் 15 மீட்டர்கள் தொலைவு வரை கலவையை பீய்ச்சி அடிக்கும் திறன் கொண்டது, 50லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியில் இக்கலவை இருக்கும்.

இதனை கொண்டு விமான நிலையங்கள், மருத்துவமனைகள், அங்காடிகள், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுத்தப்படுத்தலாம்.

முதல் கட்டமாக இவை தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, விரைவில் நாடு முழுவதும் இவை தயாரித்து வழங்கப்படும் என கூறப்படுகிறது.