
இந்திய விமானப்படை தற்போது போர் விமானங்களுக்கான தேவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக தற்போது 114 பல்திறன் நடுத்தர போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்திற்கு டென்டர் விடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது கொரோனா காரணமாக பொருளாதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2021 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.9% சதவிகிதமாக இருக்கும் என ஐ.எம்.எஃப் ஆல் கணிக்கப்பட்டுள்ளது.
இது 2022ஆம் ஆண்டில் 7% ஆக இருக்கும் எனவ கணிக்கப்பட்டாலும், அந்த நேரத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களுக்கான பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கும். ஆகவே அந்த நேரத்தில் இந்த 114 விமானங்களுக்கான ஒப்பந்தம் மற்றும் வேறு அத்தியாவசியமான பெரிய ஆயுத ஒப்பந்தங்களை அரசால் மேற்கொள்ள முடியுமா என்பது மிகப்பெரிய சந்தேகமாகும்.
கூடுதலாக 40 தேஜாஸ் மார்க் 1ஏ மற்றும் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு சுமார் 10பில்லியன் அமெரிக்க டாலர்கள் மேலும் 12 சுகோய்30 விமானங்கள் , 21 மிக்29 விமானங்கள் வாங்க 5பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.