இந்திய கனேடிய உறவில் விரிசல் !!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு இந்தியா வந்த போது காலிஸ்தான் ஆதரவு காரணமாக கசப்பான சில விஷயங்கள் நடைபெற்றன, அதிலிருந்து இன்று வரை இந்திய கனெடிய உறவுகள் மோசமான நிலையை எட்டியுள்ளன.

இதற்கு காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனேடிய அரசு அளித்து வரும் ஆதரவு சுட்டிக்காட்டப்படுகிறது.

சமீபத்தில் இந்திய வம்சாவளி சீக்கியர் ஒருவரும் அவரது மனைவியும் காலிஸ்தானியர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கனெடிய உளவுத்துறை அவர்களை கைது செய்தது.

ஆளும் கட்சியான கனெடிய லிபரல் கட்சியில் பாகிஸ்தான் ஆதரவாளர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்களும் உயர் பொறுப்புகளில் உள்ளனர் குறிப்பாக கனேடிய அரசிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

கனேடிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜ்ஜான், கனேடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் நவ்தீப் பெயின்ஸ் ஆகியோர் தீவிர காலிஸ்தானி ஆதரவாளர்கள் ஆவர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில முதல்வரும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான கேப்டன் அமரீந்தர் சிங் மேற்குறிப்பிட்ட நபர்களை வெளிப்படையாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் என விமர்சித்ததும், கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜான் இந்தியா வந்த போது ஒருபடி மேலே சென்று காலிஸ்தான் ஆதரவாளரை சந்திக்க மாட்டேன் என மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

கனேடிய எதிர்கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங்கும் தீவிர காலிஸ்தான் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1980களில் காலிஸ்தான் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த போது பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்திய படைகள் காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழித்து கட்டினாலும், கடந்த 5 ஆண்டுகளில் காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் பஞ்சாபில் தூண்டி விட கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூலமாக பாகிஸ்தானுடைய ஐ.எஸ்.ஐ முயன்று வருகிறது.

இந்த பிரச்சினை இந்தியாவில் தீவிரமாக பார்க்கப்படும் சமயத்தில், ராஜாங்க ரீதியாக கனடா போகும்போது நீர்த்து போக செய்யப்படுகிறது.

இதற்கு காரணமாக கனெடிய அரசியலிலும், அரசிலும் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் காரணமாக கூறப்படுகின்றனர்.

கனேடிய அரசியலில் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட 4 பாகிஸ்தானியர்கள் உள்ளனர், கனடாவில் வசிக்கும் இக்ரா காலித் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி எனும் கட்சியின் உறுப்பினர் ஆவான், மேலும் இவனுக்கு ஐ.எஸ்.ஐ உடன் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

முன்னாள் கனேடிய பாகிஸ்தான் கவுன்சில் தலைவரான தாரிக் சவுதிரி வான்குவரில் உள்ள பாக் தூதரகத்திற்கு அடிக்கடி அறிக்கை அளிப்பவன் என கூறப்படுகிறது.

மேலும் கனேடிய பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியவற்றுக்கு அரசு உத்தரவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்ற உதவும் ப்ரைவி கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஜவாத் உஸைன் குரேஷி என்பவனும் காரணமாக சொல்லப்படுகிறான்.

பாகிஸ்தானுக்கு கனடாவில் இருக்கும் ஆதரவு அளப்பரியது, மிக குறைந்த அளவில் பாகிஸ்தானியர்கள் வாழும் வான்குவர் நகரில் கூட பாக் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகம் அங்கு வாழும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் உள்ளது.

இதன் வேலை காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களை தூண்டி விடுவது, ஒரு முறை கனேடிய தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினரும் காலிஸ்தான் எதிர்ப்பாளருமான உஜ்ஜால் தோஸான்ஜ் வான்குவார் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் முன்னாள் கன்ஸர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான ஜேஸன் கென்னி தலைவர் பதவி போட்டியில் வெற்றி பெற ஆதரவு பெறும் வகையில் பாகிஸ்தானியர்களை அதிக அளவில் சேர்த்தது தொடர்பாக அல்பெர்ட்டா தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி கனேடிய உளவுத்துறையிலும் பாகிஸ்தானுடைய ஆதிக்கம் உள்ளது, கனேடிய உளவுத்துறையில் ஆள்சேர்ப்பு பிரிவில் பணியாற்றும் தஹிரா முஃப்தி பாகிஸ்தான் வம்சாவளி நபர் ஆவர். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா ரஷ்யா சீனா சவுதி அரேபியா ஆகிய நாடுகள் வரவிருக்கும் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் அதிக அளவில் தில்லுமுல்லு செய்யும் பாகிஸ்தான் இப்பட்டியலில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

இத்தனை தீவிர பாகிஸ்தான் ஆதிக்கம் மற்றும் ஆதரவு இந்தியாவை கனடாவின் அறிவிக்கப்படாத எதிரியாக குறிப்பிடுகிறது.
இதன் காரணமாக மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள இந்திய கனேடிய உறவை சரிசெய்ய இந்திய தனது சிறந்த ராஜதந்திரிகளில் ஒருவரான அஜய் பிசாரியா அவர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.