காவேரி என்ஜினுக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஃபேன் !!

  • Tamil Defense
  • April 26, 2020
  • Comments Off on காவேரி என்ஜினுக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஃபேன் !!

இந்தியாவிடம் தற்போது ஹெச்.டி.இ.எஃப், ஹெச்.டி.எஸ்.இ, ஷக்தி மற்றும் காவேரி ஆகிய என்ஜின்கள் உள்ளன.

இதில் காவேரி மட்டும் சில பிரச்சினைகள் காரணமாக பயன்பாட்டிற்கு வரவில்லை, காவேரி என்ஜின் வடிவமைப்பு மற்றும் உலோகம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கபட்டுள்ளது. ஆனால் தற்போது காவேரி என்ஜினுக்கென புதிய உலோகம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காவேரி என்ஜினுக்கான புதிய ஃபேன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபேன் அதிக அழுத்தம் ஆகியவற்றை தாங்கி அதிக சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.