
இந்திய தரைப்படை ஒரு புதிய தானியங்கி ட்ரோன் ஒன்றினை சோதனை செய்துள்ளது.
பஞ்சாபில் ஃபஸில்கா மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் இந்த ட்ரோன் சோதனை செய்யப்பட்டது.
இச்சோதனையகல் ட்ரோன்கள் கொரோனா நிவாரண பொருட்களை கொண்டு குறிப்பிட்ட இடங்களில் இறக்கிவிட்டு வரும், அதாவது போக வேண்டிய இடத்தின் தகவல்கள் ட்ரோனுடைய அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் அந்த அந்த இடங்களுக்கு செல்லும் ட்ரோன்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு தாழந்து வந்து சுமையை இறக்கும். இப்படி இறக்கப்பட்ட பொருட்கள் எந்தவித சேதமும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரோன்கள் மூலம் பல பகுதிகளுக்கு ராணுவம் சப்ளைகளை சிக்கலின்றி கொண்டு சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது