சீன கடற்படையின் புதிய நீர்மூழ்கி கப்பல் !!

  • Tamil Defense
  • April 27, 2020
  • Comments Off on சீன கடற்படையின் புதிய நீர்மூழ்கி கப்பல் !!

சீன அரசு பத்திரிகையான க்ளோபல் டைம்ஸ் ஏப்ரல் 22 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் சீன கடற்படை புதிய அதிநவீன நீர்மூழ்கி ஒன்றினை தனது படையில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த செய்திகுறிப்பில் அது என்ன வகை வகையான நீர்மூழ்கி கப்பல் என குறிப்பிடபடவில்லை.

அனேகமாக இது தற்போது சேவையில் இருக்கும் அணுசக்தியால் இயங்கும் டைப்094 அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிகளின் அடுத்த வடிவமான டைப்096 ரக நீர்மூழ்கியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.இது அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பலாகும்.

இந்த வகை நீர்மூழ்கிகள் சுமார் 11,900 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்டவை ஆகும் மேலும் ஒரே ஏவுகணை பல அணு ஆயுதங்களை சுமக்கும் வகையிலான எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்தை கொண்டதாகும்.

மேலும் இதன் அடுத்த வடிவமான டைப்098 ரக நீர்மூழ்கி கப்பல்களுக்கான திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.