நீர்மூழ்கி கப்பலில் விபத்து கடற்படை வீரர் வீரமரணம் !!

விசாகப்படினத்தில் இந்திய கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஐ.என்.எஸ் அரிஹந்த் கடற்படையில் இணைந்த நிலையில் , ஐ.என்.எஸ் அரிகாட் சோதனையில் உள்ளது. மீதமுள்ள இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கட்டுமானத்தில் இருந்தன. அவற்றில் ஒரு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்தில் பரம்ஜீத் சிங் என்ற கடற்படை வீரர் சிக்கி கடுமையான காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு திறனை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 6 தாக்குதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான திட்டம் தயாராக உள்ளது.

இவை 6 கப்பல்களும் சுமார் 6000டன்கள் எடை கொண்டவையாக இருக்கும்.

மேலும் 12,000 டன்கள் எடை கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் திட்டமும் உள்ளது.