
ரஷ்யாவிடம் இருந்து 1988ஆம் ஆண்டு ஐ.என்.எஸ். சிந்துவீர் என்ற கிலோ ரக நீர்மூழ்கி கப்பலை இந்தியா வாங்கியது.
இக்கப்பல் இடைக்காலத்தில் ரஷ்யாவின் ஸெவ்ராட்வின்ஸ்க் நகரத்தில் மேம்படுத்தப்பட்டது.
தற்போது இக்கப்பல் கடந்த ஃபெப்ரவரி மாதத்தில் முழுவதும் சரிபார்க்கப்பட்டு, மேம்படுத்தபட்டுள்ளது.
இனி விரைவில் மியான்மர் கடற்படை இக்கப்பலை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்திய கடற்படையிடம் 8 கிலோ ரக நீர்மூழ்கிகள் மீதமிருக்கும் மேலும் ரஷ்யா இதில் 3 கப்பல்களை மேம்படுத்தி தருவதாகவும் கூடுதலாக 3 கிலோ ரக கப்பல்களை தருவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.