கொரோனா நிதி வழங்க தனது பதக்கங்களை ஏலம் விடும் மும்பை தாக்குல் ஹீரோ !!

  • Tamil Defense
  • April 18, 2020
  • Comments Off on கொரோனா நிதி வழங்க தனது பதக்கங்களை ஏலம் விடும் மும்பை தாக்குல் ஹீரோ !!

கடற்படை சிறப்பு படையான மார்க்கோஸ் பிரிவில் பணியாற்றி மும்பை தாக்குதலின் போது தாஜ் ஒட்டலில் பயங்கரவாதிகளுடன் பங்கேற்றவர் மார்க்கோ வீரர் ப்ரவீன் குமார் டியோட்டியா. இதற்காக அரசு இவருக்கு ஷவுரிய சக்கரா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை இவர் கொன்றாலும், துப்பாக்கி சூட்டில் இவரது 4 விலா எலும்புகள் நொறுங்கியது,வலது பக்க நுரையீரல் மிக கடுமையான சேதம் அடைந்தது. கடற்படை மருத்துவமனையில் மருத்துவர்கள் இவரது சட்டையை கழற்றிய போது இரத்தம் பொங்கி வழிந்ததாகவும் மிகப்பெரிய தசைப்பகுதி மார்பில் இருந்து பிரிந்து விழுந்ததாகவும் கூறினர்.

இவர் 19நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் மேலும்
இவரை காப்பாற்ற 5 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன, இன்றும் இவரது மார்பு மற்றும் நுரையீரலில் பல சிதிலங்கள் இருக்கின்றன.

இதன் பின்னர் ஒய்வுப்பெற்ற அவர் கடுமையான விடாமுயற்சியின் மூலமாக மாரத்தான் பந்தயங்களில் சாதிக்க தொடங்கினார்.

தற்போது நாட்டில் கொரோனா அபாயம் உள்ள நிலையில் மாரத்தான் பந்தயங்களில் தான் பெற்ற 22 பதக்கங்களை ஏலம் விட முடிவு செய்துள்ளார். இதில் கிடைக்கும் பணத்தை கொரோனா உதவி நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

இதன்படி இரு பதக்கங்களை ஏலம் விட்டு சுமார் 2லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார்.

நுரையீரல் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் அடைந்து, ஒரு காது கேட்கும் திறனை இழந்து, தலையில் தோட்டா பாயாமல் மயிரிழையில் பிழைத்தார் இத்தனை கஷ்டப்பட்ட பின்னரும்
தனது சிகிச்சைக்காக தாஜ் நிர்வாகத்திடம் நிதி உதவி கோரும் அளவுக்கு உதாசீனம் செய்யப்பட்ட அவர் எந்த காழ்ப்புணர்ச்சியும் இன்றி தற்போது தன்னால் இயன்றதை நாட்டிற்கு செய்கிறார்.

இது அன்றும் இன்றும் என்றும் தேசத்தின் பணியில் அவர் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார் என்பதை காட்டுகிறது.