இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை வேண்டும் மலேசியா

  • Tamil Defense
  • April 8, 2020
  • Comments Off on இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை வேண்டும் மலேசியா

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தங்கள் நாட்டிற்கும் தேவைப்படுவதாக மலேசியா அரசு இந்தியாவுடன் கேட்டுள்ளது.இந்தியாவிடம் கிட்டத்தட்ட 30 உலக நாடுகள் மருந்துகள் எதிர்பார்த்து நிற்கின்றன.கோரோனா மருத்துவத்தில் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் முக்கிர பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அமெரிக்கா,பிரேசில்,கல்ப் நாடுகள்,ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகள் வேண்டியிருந்த நிலையில் தற்போது தென்கிழக்காசிய பகுதியில் இருந்து வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன.இந்தியாவும் முதலில் ஏற்றுமதிக்கு தடை விதித்து பின்பு அண்டை நாடுகளுக்கும் கொரானா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்ய முடிவு செய்திருந்தது.

இந்தியாவும் சில மெடிக்கல் பொருள்களை மலேசியாவிடம் இருந்து பெற உள்ளது.அதே போல சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து முக கவசங்கள் உள்ளிட்ட சுய பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா பெற உள்ளது.80 லட்சம் மெடிக்கல் உபகரணங்கள் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து பெற உள்ளது.

சிஏஏ சட்டம் காரணமாக சில மாதங்களுக்கு முன் இந்தியா-மலேசியா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.அதன் பிறகு மலேசியத் தலைமையே மாறிய பிறகு தற்போது உறவுகள் சீரடைந்து வருகிறது.

சில பேர் அமெரிக்க மிரட்டலில் தான் இந்தியா அமெரிக்காவிற்கு மெடிக்கல் சப்ளை வழங்க பயந்து ஒப்புக்கொண்டது என கூறி வருகின்றது.அது உண்மையாகவே இருந்தாலும் எந்த நிலையிலும் எனது நாட்டை யாரிடம் விட்டுக்கொடுத்து பேச மாட்டேன்..ஆனால் உண்மை இல்லை எனத் தெரிந்தும் இந்திய வை கேவலப்படுத்த கிளம்பிவிட்டனர் குறிப்பிடத்தக்க சிலபேர்..வர்த்தக்போர் என்பது உலகெங்கும் நடந்து வரும் ஒன்று.அமெரிக்கா-சீனா உறவு சரிந்ததற்கு காரணம் தென்சீனக் கடல் விவகாரம் முழு காரணம் அல்ல..வர்த்தக போர் தான்..வரி அதிகரிப்பு தான்..

அதே போல தான் அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக ட்ரம்ப் ஏற்கனவே பல முறை இந்தியாவிடம் கூறியிருந்தார்.அதே போல இந்தியப் பொருள்களுக்கும் அமெரிக்கா வரி விதித்தது.இது தான் பதிலடி..நீ செய்தால் நானும் செய்வேன்..

இது சில காலமாகவே நடைபெற்று வந்தது.இப்போது கூட அமெரிக்கா மிரட்டியதால் தான் இந்தியா பணிந்தது என இல்லை.அவர்கள் இதுபோன்ற பொருளாதார தடைகள் விதித்தால் இந்தியா அதன் தேவைக்காக வேறு நாட்டை நாடும்.இந்தியா ஆகப் பெரிய சந்தை.அதை கைப்பற்ற மற்ற நாடுகளும் இதை வாய்ப்பாகவே கொள்ளும்.இந்தியாவிற்கு இது பிரச்சனையே அல்ல.

ஆனால் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் தான் உதவ முன்வந்தது.அமெரிக்கா மிரட்டினால் ஏன் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.மலேசியா ஒரு முறை இந்தியாவை எதிர்த்ததற்கே அங்கு ஆட்சி மாற்றமே நடந்தது.

அமெரிக்கா என்ன போர் நடத்திவிடுவானா ? இல்லை அதை எதிர்கொள்ள நம்மிடம் தான் பலம் இல்லையா ? இதற்கெல்லாம் யாரும் அடிபணிய மாட்டார்கள்..இந்தியா அமெரிக்கா உறவு முன்னெப்போதும் விட தற்போது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது.அதை கெடுத்துக்கொள்ள இரு நாடுகளுமே விரும்பாது.இந்த மெடிக்கல் சப்ளையை ஒரு காரணமாக மாற்ற இரு நாடுகளுமே விரும்பாது.

ஒன்று சொல்கிறேன்..இந்தியா மலேசியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் உதவ தான் போகிறது..அது நம் குணம்.நம் பண்பாடு…

நமது தேவைக்கு பிறகு தான் அனைத்தும்.