இந்தியாவிடம் மருத்துவ சப்ளை கேட்கும் அமெரிக்கா-இந்தியா அனுப்புமா ?

  • Tamil Defense
  • April 5, 2020
  • Comments Off on இந்தியாவிடம் மருத்துவ சப்ளை கேட்கும் அமெரிக்கா-இந்தியா அனுப்புமா ?

அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் கடந்த சனி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.இந்த தொலைபேசி உரையாடலில் கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்படக்கூடிய ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரானா தொற்று அதிக பரவல் கொண்ட போது முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதன இந்தியா நிறுத்தியது.ஆனால் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு உதவிகள் செய்து வருகிறது

அமெரிக்க அதிபரின் வேண்டுதலுக்கு பிறகு இந்தியா ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தி வைத்திருந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் ஆர்டர் ஏற்றுமதியை பரிசீலனை செய்வதாக இந்திய பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்துகளை விரைவாக அனுப்ப தான் கோரிக்கை விடுத்திருந்ததாக செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆர்டரை இந்தியா அனுப்பும் பட்சத்தில் தானும் அந்த மாத்திரையை உட்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமரிடம் கூறியுள்ளார்.