
பாக் ஆஃப்கன் எல்லையில் சமீபத்தில் பிடிபட்ட ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதி விசாரணையின் போது தனது பயிற்சி பற்றிய தகவல்களை கூறியுள்ளான்.
அவன் கூறுகையில் நான் பாகிஸ்தானில்
4 மாதங்கள் ஆயுத பயிற்சி பெற்றேன் பின்னர் ஆஃப்கனில் ஊடுருவி தலிபான்களுடன் இணைந்து தாக்குதல் நடத்த அனுப்பபட்டேன்.
அதன்படி ஆப்கானிஸ்தானுடைய நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மொஹமந்த் தாரா பகுதி வழியாக 10 நாட்களுக்கு முன் ஊடுருவினோம் என கூறியுள்ளான்.
இவர்களை பிடிக்க நடந்த தாக்குதலில் 10 ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகள், 5 ஆஃப்கன் தலிபான்கள் மற்றும் 4 ஆஃப்கன் வீரர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து கையெறி குண்டுகள், மோர்ட்டார்கள், ஆர்.பி.ஜி க்கள், ரஷ்ய ஸ்நைப்பர் துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.